கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுக்காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற இரண்டு விமானங்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு எடுக்கப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.