கனடாவில் சொத்து வாங்கத் தடை

கனடாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டில் வீடுகளின் மதிப்பு உயர்வடைந்துள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக  அரசு தெரிவித்துள்ளது. எனினும் கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இத்தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.