கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதில் தலைவர் நியமனம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவை நியமிக்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ராஜா கொலுரேயை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், உப தலைவர் வீரசுமன வீரசிங்க பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் தவிசாளர் பதவியிலிருந்து ராஜா கொலுரேவை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.