கர்நாடக அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

4 நாட்களாக இழுக்கப்பட்ட சட்டப்பேரவை அமர்வு தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. பாஜக தலைவர் எடியூரப்பா வெற்றிச் செய்கையை செய்தார். இத்துடன் 14 நாட்கள் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது. அடுத்த அரசு ஆட்சியமைக்கும் போது இன்னொன்று தொடங்கும்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பை சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனிடையே, 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.