கறுப்பு சந்தை விவகாரம்: மறுக்கிறது அமைச்சு

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேசியதாக தெரிவித்த அமைச்சு, குறித்த செய்தியில் கூறப்பட்ட கருத்துக்களை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல கொள்வனவுகள் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.