காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

பிரதமர் மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் செய்வேன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வேன்
என்று கூறினார். ஆனால், 15 மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கு
மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடி தள்ளுபடி செய்து இருக்கிறார்.

விவசாயிகளின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், ஒருமுறைகூட அவர் வாய்திறந்து பேசவில்லை.

அதேசமயம், கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் அமரீந்தர் சிங் ஆகியோரிடம் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். அவர்கள் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடனை
தள்ளுபடி செய்தனர்.

இன்று நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகள் குறித்து கவலைப்படவில்லை.

மெகுல் சோக்சிக்கும், நிரவ் மோடிக்கும் ரூ.30 ஆயிரம் கோடியை நரேந்திர மோடி கடன் கொடுத்திருக்கிறார்.

அந்தப் பணத்தின் மூலம் விவசாயிகளுக்கு இருமுறை கடன் தள்ளுபடி வழங்க முடியும்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

(மத்தியப் பிரதேசம் பிப்லியா மண்டியில்  கிஷான் சம்மிரிதி சங்கல்ப் பேரணி -பொதுக்கூட்டத்தில் – ராகுல் காந்தி)