காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

காத்தான்குடி நகரில் கடைகள் பூட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அத்துடன், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, காத்தான்குடி பள்ளிவாசல் மீது நடத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூர்ந்து இன்று (03), காத்தான்குடி நகரில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.