காலி முகத்திடலில் பதற்றம்

காலி முகத்திடலில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் குழுமியிருந்தவர்களை கைது செய்வதற்கு முயன்ற போதே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த போராட்டக்காரர்களில் நால்வரையே பொலிஸார் கைது செய்வதற்கு முயற்சித்துள்ளனர். அதன்பின்னரே, ஏனைய போராட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர்.