காவல்துறையாக மாறிய வவுனியா பொலிஸ் நிலையம்

தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப் பலகையில் உள்ள “பொலிஸ்” என்ற சொல், “காவல்துறை” என மாற்றப்பட்டுள்ளது. யுத்தக் காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில், “காவல்துறை” என்று, தமிழ் மொழிப் பெயர்ப் பலகை அறிமுகப்படுத்தியமைக் குறிப்பிடத்தக்கது.