கியூபாவில் தனியார் வர்த்தகத்திற்கு அனுமதி

சிறிய மற்றும் மத்திய அளவான தனியார் வர்த்தக துறைக்கு கியூப அரசு அனுமதி அளித்துள்ளது. பிடெல் காஸ்ட்ரோவுக்கு பின்னர் 2008இல் ஜனாதிபதி பதவியை ஏற்ற அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டில் அறிமுகப்படுத்திய சீர்திருத்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேக்கம் கண்டிருக்கும் கியூப பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த ராவுல் காஸ்ட்ரோ முயன்றபோதும் அதற்கு கியூப கொம்மியுனிஸ கட்சியின் கடும்போக்காளர்களிடம் எதிர்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான உறவை மீள ஆரம்பித்த கியூபா, நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. முடி திருத்துவது தொடக்கம் உணவகங்கள் வரை தற்போது பல்வேறு தொழில் துறைகளிலும் சுய வேலைவாய்ப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.