கியூபாவில் பாடசாலைக் குழந்தைகளின் ஓய்வு நேரம்….

 

ஆயிரக் கணக்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட பேஸ்புக் பதிவுகளில் ஒன்று. கியூப மக்கள், முதலாளித்துவ சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாத காரணங்களில் இதுவும் ஒன்று. சோஷலிசத்தில் எந்தளவு குறை இருந்தாலும், அதுவே எமக்குப் போதும் என்று, கியூப மக்கள் இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள். கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.