கியூபாவைத் தாக்கிய ஈட்டா புயல்

இன்றிரவோ அல்லது நாளை அதிகாலையோ புயலானது புளோரிடாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிகபட்சமாக மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தாலான காற்றை ஈட்டா புயல் கொண்டிருந்தது.

குவாத்தமாலாவில் அறியப்பட்ட உயிரிழந்தோர் எண்ணிக்கையை 15 இலிருந்து 27 ஆக அங்குள்ள அதிகாரிகள் நேற்று உயர்த்திய நிலையில் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

தென் மெக்ஸிக்கோவில் குறைந்தது 20 பேர் பலியானதோடு, ஹொண்டூரஸில் 21 பேர் இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.