கிறித்தவ அமைப்பு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலை உடனடியாக நிறுத்தக்கோரி மட்டக்களப்பு நகரில் இன்று (16) கிறிஸ்தவ இளைஞர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அப்பாவி மக்கள் இரு தரப்பிலும் பலியாகும் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தை நிறுத்து உட்பட் பல வாசகங்களைக் தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டகார்கள் ஏந்தியிருந்தனர்.