கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகால சட்டம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை 38 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி சபையில் இல்லை.