கூட்டமைப்புக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு! – புலம்பெயர் இலங்கையர்கள்

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு நடாத்திய ஆதரவு கூட்டங்களில் தெரிவித்த கருத்துகள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தங்களிடம் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரின் உதவியும் இவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.