‘கூட்டமைப்பு அரசாங்கம் நாளை மலரும்’

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆதரவுடன், கூட்டமைப்பு அரசாங்கம் நாளை (20) செவ்வாய்க்கிழமை அமைக்கப்படும்” என தென் மாகாண ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மக்கள் அரசாங்கம் ஒன்றுக்கான தேவை தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் பார்க்க இந்த நேரத்தில் மக்கள் அரசாங்கத்தை அமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்றார்.

“எமது நாட்டு மக்களின் உரப் பிரச்சினை, இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள், தேவையற்ற அரசமைப்பு என்பவற்றை நாம் நிறுத்த வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நாம் தவறவிட்ட பிழையை நாம் திருத்திக்கொண்டு இம்முறை அரசாங்கத்தை நடத்திச் செல்வோம். எனினும், இவ்வாறான பலமற்ற அரசாங்கத்தால் நல்ல முதலீடுகள் எமது நாட்டுக்கு கிடைப்பதில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், எதிர்வரும் சில நாட்களுக்குள் நாம் அமைக்கப் போகும் அரசாங்கத்தின் மூலம் நாட்டுக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன் பின்னர் பலமிக்க அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத்​தேர்தலை நடத்தும் எண்ணத்தில் நாம் இருக்கின்றோம்.

3 வருடத்தில் புலியைப் போல், 3 வருடங்களுக்குள் யானைக்குப் பிணை இல்லாமல் செய்வதற்கு மஹிந்தவால் முடிந்தது. கட்சி பேதங்களை மறந்து மஹிந்த என்ற கதாப்பாத்திரம் மீது, இன்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றார்.