“தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல!” ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய (31/08/2016) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.