கொழும்பு, கம்பஹாவில் பரவும் கொரோனா

அத்துடன், கம்பஹா மாவட்டத்துக்கு அடுத்தபடியாக 133 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் களுத்துறையில் 50 பேரும், அம்பாறையில் 42 பேரும், இரத்தினபுரியில் 27 பேரும், யாழ்ப்பாணத்தில் 21 பேரும், கேகாலையில் 19 பேரும், குருநாகலில் 18 பேரும், திருகோணமலையில் 4 பேரும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒருவர் இருவர் என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தின் பூகொட பிரதேசத்தில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டனர். நேற்று மாத்திரம் 47 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பிரதேசத்தில் 83 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.