‘கொவிட்-19இன் 2ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’

இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தலைத்தூக்கிய வூஹான் நகரம், நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, சீனாவை உலகம் சிறந்த கண்ணோட்டத்துடன் பார்த்தாலும், ஆபத்து புதிய தோற்றத்தில் தலைத்தூக்கக் கூடும் என்பது சீன ஜனாதிபதியின் கருத்துகள் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் சீனப் பிரஜைகள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும் சீன ஜனாதிபதி தனது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எந்த வகையில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாய் வீடாக சீனா இருக்கக் கூடாது எனவும், சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.