“கோட்டாவே வீட்டுக்குப் போ”

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பங்கேற்றிருப்பவர்கள்,GOTA GO HOME  (கோட்டாவே வீட்டுக்குப் போ) என எழுதப்பட்ட பட்டிகளை தலையில் அணிந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தவரையில், சாரிகளிலும் அந்த பதாகையை ​ஒட்டிக்கொண்டுள்ளனர்.