“கோட்டா கோ கம”வில் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன

காலி முகத்திடலில் உள்ள, எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன. இன்று (05) மாலை 5 மணிக்கு முன்னர், தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு   ஒலி பெருக்கியின் மூலமாக அறிவித்தல் ஒன்றை பொலிஸார் விடுத்திருந்தனர்.