கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றம்

கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிஸாருக்கும், பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாதைகளை தம்வசப்படுத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் சிறைப்பிடித்தனர். இதனையடுத்தே, ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.