சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற இருவர் கைது

இந்தியாவின் தமிழ்நாடு அகதிகள் முகாமொன்றிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வந்த இருவரும், இவர்களுக்கு உதவிய இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இருவரில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரெனவும் சுவாசப் பிரச்சினைக் காரணமாக அவர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்து வந்த மற்றொருவரும் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என சந்தேகிப்பதாகவும், இவர்கள் இருவரிடமும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.