சந்திரிகா அரசியலுக்கு ‘குட்பாய்’

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர், அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார் என்று, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.