சபாநாயகர் அதிரடி: நாளை வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார். அதனை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என சபாநாயகர்  மஹிந்த யாப்பா அறிவித்தார்.

 இந்நிலையிலேயே பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு நாளை (05)   நடைபெறவிருக்கின்றது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

நெருக்கடிக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதால், எந்த அணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.