சமூகமே முக்கியமெனக்கூறி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்தனர்

சமகால அரசாங்கத்தில் அங்கம் வ​கிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 9 பேரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பான இராஜினாமா கடிதங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.