சமூக மாற்றத்திற்கு கரம் கொடுக்கும் ’’ மலையக விழிகள் ’’அமைப்பு

இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, கொவிட் தொற்று நிலவிய காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு தொற்று நீக்கிகளும் வழங்கப்பட்டன. வறுமை கோட்டின் வாழும் மக்களுக்கு இதுவரை 50 வேலைத்திட்டங்களில் உலர் உணவுப் பொதிகள் மத்திய, ஊவா மாகாணங்களில் வழங்கப்பட்டுள்ளன.

தவிர, விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நற்காலிகள், சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்கான நிதியுதவிகள் என்பன தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வமைப்பின் தலைவராக குகன் செயற்படுவதோடு, செயலாளராக பிரசாந், பொருளாளராக நேசராஜன் ஆகியோரும் இணைப்பாளர்களாக மூர்த்தி, கிறிஸ்டோபர், விஜயா மற்றும் புவனேஸ் ஆகியோரும் ஆலோசகர்களாக அதிபர் கனகரட்ணம், கிருஸ்ணா ஆகியோரும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.