சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை : ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது  அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும்  அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.