’சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்து என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்’

“ஜனாதிபதி போர் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தினால், நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தீர்வு காணவேண்டியுள்ளது” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.