சர்ச்சைக்குரிய சீன கப்பல் குறித்து புதிய செய்தி

சீன ஆராய்ச்சிக் கப்பலான yuan wang -5 இன்று (22) மாலை 4.00 மணிக்கு மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது. துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா இதை தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக் கப்பல் கடந்த 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
  செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் ஆதரவு தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட யுவான் வாங்-கிளாஸ் கப்பல் அந்த தொழில்நுட்பத்தின் மூன்றாம் தலைமுறையை குறிக்கிறது.