‘சர்வதேச சட்டத்தை மீறும் கனடா’

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை கனடா மீறுவதாக, கனடா சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், சவுதிக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் இடைநிறுத்துமாறு கனடாவை அந்நாட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகின்றது. கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கமானது ஆயுதங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாக நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.