சஹ்ரானின் மற்றுமொரு பயிற்சி முகாம் நுவரெலியாவில்

இந்த கட்டடத்தில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 36 பேர் பயிற்சி பெற்றுள்ளனரென, விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கட்டடத்திலேயே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான இறுதி பயிற்சி, ஏப்ரல் 17ஆம் திகதியன்று ஒத்திகை பார்க்கப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.