சஹ்ரானின் மைத்துனன் சவூதியில் கைது

உயிர்த்த ஞாயிறு (21) தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமின் மைத்துனர் என்று குறிப்பிடப்படும் மௌலவி சாந்தவாஜ் எனப்படும் நபர், சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்களா என்பது தொடர்பில், இந்தியாவின் புலனாய்வு நிறுவனமொன்று, சவூதி அரேபிய அதிகாரிகள் சிலருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.