சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்

சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது ஐநா மனிதநேய நிறுவனத்தின் தலைவர் ஜன் இக்லாண்டுக்கு தெரிவதுபோல தோன்றவில்லை என்று கூறியிருக்கும் பாஸ்கோஃப், பயங்கரவாதக் குழுக்கள் என்று அவர் கூறுவோரால் நடத்தப்படுகின்ற அட்டூழியங்களில் இக்லாண்ட் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போவில் தாக்குதல் தொடங்கியது பிறகு, ரஷ்ய அதிகாரிகள், பல குழந்தைகள் உள்பட ஒரு லட்சத்திற்கு மேலான பொது மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உதவியிருப்பதாக முன்னதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது,

7 ஆயிரம் பேர் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

அலெப்போவின் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் கொடியை அசைப்பது போலவும், வானத்தை நோக்கி சுட்டு அரசு படைப்பரிவுகளின் முன்னேற்றத்தை கொண்டாடுவது போலவும் காணெளி காட்சிகளை அரசு ஆதரவு ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.