சிறுபான்மையினர் முன்னேற்றத்தை தடுக்கவே இராணுவம் குவிப்பு

தமிழர்கள் போன்றே முஸ்லிம்களும் முன்னேற கூடாது என்பதற்காக,  இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.