சீனாவின் பொருளாதார கொள்கை: ஐரோப்பிய வர்த்தகக் குழு அதிருப்தி

சீனாவின் பொருளாதார மூலோபாயம் ஐரோப்பிய நிறுவனங்களை மிகவும் சவாலான நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அது நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகக் குழுவொன்று எச்சரித்துள்ளது.