சீனா: நீருக்குள் செல்லும் மிக நீண்ட சுரங்கப்பாதை

நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்ட இச் சுரங்கப்பாதையானது 11 கிலோ மீற்றர் நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை கட்டமைக்க 2 மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமான கொன்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 18 மீற்றர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டுநர்களின் சோர்வைப் போக்கும் வகையில் வண்ணமயமான எல்இடி விளக்குகளும் இப் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.