சுகாதார அமைச்சு கைமாறுகிறது?

சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, வெளிவிவகாரம், கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளிலும் வெகு விரைவில் பல மாற்றங்கள் ஏற்படுமெனவும் தகவல் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.