சுதந்திரக் கட்சி ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், இலங்கையில் முதல் தடவையாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று, 36 வருடங்கள் கடந்துவிட்டதை நினைவுக்கூர்ந்தும், கலவரத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.