சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 20  நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 26,717 ஆகும். அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 676 ஆகும். இந்தநிலையில், கடந்த வருடம் இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply