சுலக்சனை பின் தொடர்ந்த ஆவா குழு!

யாழ் படுகொலை தொடர்பாக ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சில விடயங்கள் குறித்து ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு நாயகம் திருமதி தீபிகா உடுகம தலைமையில் விசேட விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது. சுலக்சனை ‘ ஆவா’ குழுவினர் அவர் இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் தாக்கியதாக அவர் போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இதுவரை அது குறித்து எந்தவொரு விசாரணையையும் போலீசார் செய்யவில்லை.

சுலக்சனின் சகோதரி ஒருவர் 4 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என பாதுகாப்பு துறையைச் சேர்ந்தோர் என யாரோ தொலைபேசியில் மிரட்டியுமுள்ளதான தகவல் ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களை ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிய முயன்று வருகிறது.

(Ajeevan Veer)