சுவிசில் உணர்வுபூர்வமாக தியாகிகள்தினம் நினைவுகூரப்பட்டது.

 

சுவிசில்  Aarau   மாநிலத்திலுள்ள Frick என்னுமிடத்தில்
19.06.2016 அன்று மாலை தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தோழர் நிமல்ராஜ் இன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. போராட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் கட்சியுடன் இணைந்து பணியாற்றிய தோழர்கள் மற்றும் EPDP கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தியாகிகளுக்கான அஞ்சலியாக யாழ்மாவட்டத்தில் மக்கள் விடுதலைப்படையில் முக்கியபங்காற்றி மரணமடைந்த தோழர் வோல்டன் குமார் அவர்களின் சகோதரர் மில்ரனும் அவரது துனைவியாரும் குத்துவிளக்கேற்றி அஞ்சலிதெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து தோழர் நிவாஸ் மற்றும் லலிதா ஆகியோர்குத்து விளக்கேற்றினர்.

ஒரு நிமிட மௌன அஞ்சலியைத்தொடர்ந்து அனைவரும் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலிதெரிவித்தனர்.
தோழர் பேர்னாண்டோ அவர்கள் தோழர் நாபாவுக்கும் தோழர் ஸ்ரான்லி அண்னா அவர்களுக்கும் நெருக்கமாக தோழமையோடு இ ணைந்து பணியாற்றிய காலங்களையும் தான் அவர்களுடன் இணைந்து பணி யாற்றிய காலங்களையும் நினைவுகூர்ந்து பேசினார்.
தோழர் பாஸ்கரன் அவர்கள் உரையாற்றும்போது தோழர் நாபா ஓர் அற்புதமான மனிதர். சிறந்த ஜனநாயகவாதி என்றும் அவரைப்போன்றே தோழர் குமார் தோழர் சிவா தோழர் சின்னவன் போன்றவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார்.

தோழர் சுதா அவர்கள் பேசும்போது இதில் மரணித்த பல தோழர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். மிகவும் மகத்தான தோழர்கள் இப்படங்கயைப் பார்க்குமபோது மிகவும் நெஞ்சு கனக்கின்றது.அவர்கள் எந்த இலட்சியங்களுக்காக போராடி மடிந்தார்களோ அதை முன்னெடுத்து செல்வதே நாம் அவர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.

தோழர் மகேந்திரம் அவர்கள் EPDP சார்பாக பேசும்போது தோழர் பத்மநாபா போன்றவர்கள் எங்கெல்லாம் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் குரல் கொடுத்தார்கள். தமிழர்கள் என்று மாத்திரமில்லாமல் சிங்கள மக்கள் மலையக மக்கள் இங்தியா என்று குரல்கொடுத்தார்கள். சிங்கள தமிழ் இனவாதிகள் மக்களை கூறுபோட்டு சுரண்டலை மேற்கொண்டு வருகின்றார்கள்.இதற்கெதிராக நாம் அனைவரும் இணைந்து மக்கள் மத்தரியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேணடும் என்று கூறினார்.

தோழர் கணேசலிங்கம் உரையற்றும்போது தோழர் நாபா அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையுடன் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டவரல்ல உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அடக்கி ஒடுக்கப்பட் மக்களின் போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் பலஸ்தீனத்தில் பயிற்சி பெறுவதிற்காக சென்றபோது அங்கு ஆயுதப்பயிற்சியை மட்டும் பெறவில்லை .அவர் அங்கு சர்வதேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த முற்போக்கான புரட்சிகர விடுதலைப்போராட்டங்கள் தொடர்பாக சர்வதேச போராட்ட சக்திகளுடன் கருத்துப்பரிமாறல்கள் விவாதங்களில்அக்கறைகளுடன் ஈடுபட்டார். சர்வதேச முற்போக்கு புரட்சிகர சக்திகளினுடனான உறவை இறுதிவரை பேணிவந்தார்.அவர் ஒரு சர்வதேசியவாதி என்றும் தெரிவித்தார்.

தோழர் பிரபா அவர்களினால் தோழர் நாபாவை நினைவுகூர்ந்து அவர் தனது அரசியல் பயணத்தில் தடம் பதித்த விடயங்களையும் அவருக்கும் மக்களுக்குமான உறவுகள் அவருக்கும் தோழர்களுக்குமான உறவுகளையும் உள்ளடக்கி கவிதை ஒன்றை வாசித்தார்.

தோழர் அலெக்ஸ் அவர்கள் உரையாற்றுகையில் இன்று நாம் இலங்கை இந்தியா ஐரோப்பா கனடா என உலகின் பல்வேறு பாகங்களிலும் 26வது தியாகிகள் தினத்தை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். துர்ரதிஸ்டவசமாக இவ்வருடம் அதுவும் தியாகிகள் தினமான யூன் மாதத்தில் தோழர் நாபாவின் உற்ற தோழனும் நண்பனுமான தோழர் ஸ்ராலீன் அண்ணாவை இழந்து நிற்கின்றோம். அவர் எமது கட்சி பலமடைவதிற்கு பல்வேறு வழிகளில் தன்னையும் தன்குடும்பத்தையும் தன் சொத்துக்களையும் அர்பணித்து செயற்பட்டவர். தோழர் நாபாவை போன்று அவரும் எம் அனைவராலும் கௌரவபபடுத்தப்ட வேண்டியவர்.

நாளை தமிழ்நாட்டில் அவருடைய சிலைதிறப்பு விழாவில் தோழர் சுகு மற்றும் ஏனைய தோழர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளார்கள். தோழர் நாபா போன்றே ஆளுமையுள்ள பல நூற்றுக்கணக்கான தோழர்களை இழந்து நிற்கின்றோம். அவர்கள் எல்லாரும் பேரினவாத சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டி மக்களின் விடுதலையை முன்னெடுத்து செல்லக்கூடிய மகத்தான மனிதர்கள் நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியானது அவர்கள் அனைவரும் எந்த உயரிய இலட்சியங்களை நேசித்து போராடி மரணித்தார்களோ அந்த இலட்சியங்களை வென்றெடுக்க நாமும் ஐக்கியப்பட்டு போராடுவதே நாம் அவர்களுக்கு செய்யும்உண்மையான அஞ்சலியாகுமென தேரிவித்தார்.
இறுதியாக தோழர் நிமல்ராஜ் இன் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

பத்மநாபா மக்கள் முன்னணி ( PPF)
தமிழர் சமுக ஜ னநாயகக் கட்சி (SDPT)
சுவிஸ்.