சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!

• தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்குப் 15 மில்லியன் சுவிஸ் பிறாங் பணம் வசூலிப்பு

• சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) கமிட்டியின் 12பேர் சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
• சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென கருதப்படுகிறது.
இது ஒரு அசுர முயற்சி என சுவிஸ் பொலீஸ் கூறுகிறது. சுமார் 8 வருட முயற்சியின் பின்னர் பயங்கரவாதிகளுக்குப் பணம் திரட்டியதாக சுவிற்ஸலாந்து உயர் நீதிமன்றத்தில் 13 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 12பேர் தமிழர்கள். ஒருவர் ஜேர்மானியர்.
இலங்கையில் 26 ஆண்டுகளுக்கு மேலான போரில் சுமார் 100,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.


இப் படுகொலைகளை நோக்கிய பயணத்தில் எதிர்ப்பினை நடத்திய தமிழர்கள் சிறுவர்களைக்கூட முன் அரங்குகளில் நிறுத்தினார்கள்.
அரச ராணுவம் பலரைச் சிறைக்கு அனுப்பியது. இரண்டு தரப்பிலும் போர்க்குற்றம் இடம்பெற்றது. இந்த வதை 2009ம் ஆண்டு மே மாதம் சிறுபான்மைத் தமிழர்களின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
இதே மாதம் சுவிஸ் அரசின் வழக்குத் தொடுநர் புலிகளின் நிபுணத்துவம் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்தார்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னவெனில், சுவிற்ஸலாந்திலுள்ள தமிழ்ப் பிரமுகர்கள் பணத்தினைப் பயன்படுத்தி தாயகத்தில் இடம்பெற்ற போரை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளினர் என்பதாகும்.
இது பெரும் அசுர வேலையாக அமைந்தது. இதன் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். சுவிற்ஸலாந்தில் மட்டும் 24 வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
விசாரணைகளை நடத்தியவர்கள் சுமார் 200 இற்கு மேற்பட்டவர்களைக் குறுக்கு விசாரணை செய்தனர். இதற்கான சட்ட உதவியை இணைப்பாட்சியிலுள்ள 23 அரசுகளிடம் கோரினர்.
இக் குற்றம் பல நாடுகளைச் சுற்றியதாக இருந்தது.
அயல் நாடுகளிலிருந்து ஆரம்பித்து உக்ரைன் முதல் மலேசியா பின்னர் இலங்கை என நீண்டிருந்தது.
தற்போது 8 வருடங்களின் பின்னர் 13 பிரதிவாதிகள் இக் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவ் விசாரணைகள் வழமையான வரைமுறைகளக்கு அப்பால் சென்றுள்ளது.
இவ் விசாரணைகளுக்கென நீதிபதிகள் 8 வாரங்களை ஒதுக்கியுள்ளனர்.
விசாரணைகள் வெள்ளி தவிர்ந்த திங்கள் முதல் வியாழன் வரை தொடர்ந்து நடைபெறும். கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரணைகள் ஆரம்பமாகும்.
எதிர்வரும் யூன் மாதம் 6ம் திகதியிலிருந்து அடுத்த 6 மாதங்களுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், மற்றும் வழக்குத் தொடுநர்களின் உதவியாளர்கள் என்போர் வேறெங்கும் செல்லாதபடி தடுக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ் இணைப்பு அரசுகளில் ஒன்றான பெலின்சோனா (Bellinzona) இல் சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸ் நாட்டின் ரிஸினோ ( Ticino ) ஐத் தவிர நாட்டின் ஏனைய பாகங்கள் தமிழர் மீதே பிரதான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பிரதிவாதிகள் யாவரும் உலக தமிழர் இணைப்புக் கமிட்டியைச் ( World Tamil Coordinating Committee ) சார்ந்தவர்கள் என சமஷ்டி வழக்கத் தொடுநர் காரியாலயம் கருதுகிறது.
சுவிற்ஸலாந்தில் புகலிடம் பெற்று வாழும் தமிழர்களிடத்தில், தாயகத்தில் இடம்பெறும் போருக்கு பணம் வாங்கினார்கள் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
தாயகத்து மக்களின் நிலை குறித்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக வழக்குத் தொடுநர் காரியாலயம் நம்புகிறது.
கடன் பெற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலர் மீது அதிக அழுத்தங்கள், சில சமயம் குறைவாக அல்லது எதுவுமில்லாமல் இணைந்துள்ளனர்.
இங்கு எது கட்டாயத்தின் பேரில், எது சுயமாக என்பதை முடிவு செய்வது பிரதான மையப் பொருளாக விசாரணையாளர்களுக்கு இருந்தது.
குற்றச்சாட்டுகள் இவ்வாறு தொடர்ந்தன. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது பின்வருமாறு கூறப்பட்டது.
முதலில் கடன் வழங்கும் முறை ஒன்றை ஆரம்பித்தனர். கடன்களைப் பெறவதற்கென நிதி ஸ்தாபனங்களுக்கு இரு முகவர்கள் அல்லது இடைத் தரகர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் மிகப் பெரும் தொகையான அளவில் போலியான சம்பள சான்றிதழ்களை வழங்கினர்.
இதனை சொலதூர்ன் அஞ்சலி நிதி நிறுவனம் ( Solothurn Anchali Finance GmbH ) , பேர்னர் அனிச் கொன்சல்ரிங் (Berner Anisch Consulting AG.) என்பன கையாண்டன.
இந்த நிதி நிறுவனங்கள் கிரடிற் சுவிஸி ( Credit Suisse ) என்ற வங்கி மூலமாக ஒரு பகுதி பணத்தை பெற்றுக்கொண்டனர்.
மிகவும் அதிக வருமானத்தைப் பெற்ற அவற்றின் அதிகாரிகள் இவர்களுக்கு கடன்களை வழங்கினர்.
இவ் வங்கி அதிகாரிகள் எவரும் ஒரே மாதிரியான பெரும் தொகையான போலி சம்பள சான்றிதழ்களை கவனத்தில் கொள்ளவில்லை.
பதிலாக பெரும் தொகையான கடன்களை 10.000 முதல் ஒரு லட்சம் சுவிஸ் பிராங்க் வரை சிபார்சு செய்தனர்.
இப் பணம் உலக தமிழர் இணைப்புக் கமிட்டியிடம் போய்ச் சேர்ந்தது.