சென்னையின் அடுத்த பெண் மேயர் யார்

”மாநகரத் தந்தை என்று சென்னை மேயரை அழைக்க முடியாது. மாநகரத் தாய் என்றுதான் அழைக்க வேண்டும். அந்த தாய் யார்?” என்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் படத்தோடு ஒரு கேள்வியையும் இணைத்து அனுப்பியிருந்தது இன்ஸ்டாகிராம். இந்த இன்ஸ்டாகிராம் கேள்விக்கு வாட்ஸ் அப் சுடச் சுட பதிலை டைப் செய்யத் தொடங்கியது.