சேவலும், மொட்டும் இணைந்தது

நுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் வெற்றியின் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் சீ.பீ. ரத்னாயக்கவும் கலந்துக்கொண்டார்.

சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியமைத்து உயர்ந்த சேவையினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.