ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள சிறந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று கொழும்பில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.