டக்ளஸ் தேவா, தொண்டா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவி?

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கின்றது என்று பிரபல ஆங்கில செய்தித் தளங்களில் ஒன்றான எக்கனமினெக்ஸ்ற் செய்தி பிரசுரித்து உள்ளது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் மலிக் சமரவிக்கிரம சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்கின்றார், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சுப் பதவி பெறுகின்றனர் என்று இப்பத்திரிகையின் அரசியல் நிருபர் எழுதி இருக்கின்றார். இச்செய்தியை உறுதிப்படுத்த டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை தொடர்பு கொண்ட போதிலும் முடியாமல் போய் விட்டது.