தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18ஆவது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அதற்கான திகதி அட்டவணை இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.