தமிழக தேர்தல் நடந்தது என்ன…?

அண்மைய உலக வரலாற்றில் பெரும் திருவிழாவாக நடந்து முடிந்த தேர்தல்.
உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சிகள்
முடிச்சு அவிழாத மர்மங்கள் பல

570 கோடியுடன் அகப்பட்ட பெரும் வாகனங்கள்

12 பணம் எண்ணும் இயந்திரங்களுடன் பிடிபட்ட பணக்கட்டுகள்.
வாக்களிப்பு அன்று 73.58உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்ட சத விகிதம் அடுத்த நாள் 74.68 சதவிகிதமாக மாறிய அதிசயம்.

18/05/2016 தந்தி ரிவியில் அ.தி.மு.க தான் வெல்லும் என மாலனும் ,ரவிந்திரன் துரைசாமியும்,ஹரியும் சொன்ன விளக்கங்கள்.அன்றே எனக்கு சந்தேகங்களை ஏற்படுத்தின.
பல லட்சம் போலி வாக்காளர்களை நீக்காமலேயே நடத்தப் பட்ட தேர்தல்

இவையெல்லாமே அ.தி.மு கவுக்கு சாதகமாக அமைந்தன.

ஈழ அரசியல் பிழைப்பு வாதம் வேறு தமிழக அரசியல் வேறு என்பதை இந்த தேர்தல் நிருபித்திருக்கிறது.ஆனாலும் ஈழத்தாய்? வெற்றி பெற்றிருக்கிறார்

கவலையளிக்கும் விடயங்கள்
புதிய தமிழகம் கிரிஸ்னசாமி,சிவகாமி,தொல் திருமாவளவன்,ரவிகுமார்.ஜபருல்லா போன்றோர் வெற்றி பெறாமை.

இடதுசாரிகள் இல்லாத சட்ட சபை

என் நண்பன் முகுந்தன் குறிப்பிட்டதை போல தமிழகத்தில் பொன்மொழியாய் இருக்க வேண்டியது…

”குனிந்து செல்! கூனிக் குறுகி நட!! வீழ்ந்து கும்பிடு!! உருண்டு புரளு!! – தலை நிமிராதே! ”

(Balasingam Sugumar)