தமிழக முதலமைச்சருக்கு டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இருநாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.